சுமை தூக்குவோர் மத்திய சங்கம் சார்பில் ஈரோட்டில் மே தின ஊர்வலம்


சுமை தூக்குவோர் மத்திய சங்கம் சார்பில் ஈரோட்டில் மே தின ஊர்வலம்
x

சுமை தூக்குவோர் மத்திய சங்கம் சார்பில் ஈரோட்டில் மே தின ஊர்வலம்

ஈரோடு

சுமை தூக்குவோர் மத்திய சங்கம் மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஈரோட்டில் மே தின ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு தலைமை தாங்கினார். சுமை தூக்குவோர் மத்திய சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஈரோடு வ.உ.சி பூங்காவில் தொடங்கிய ஊர்வலம் மேட்டூர் ரோடு, மீனாட்சி சுந்தரனார் ரோடு வழியாக சென்று பன்னீர் செல்வம் பூங்காவில் நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, மறைந்த சங்க உறுப்பினர்கள் 14 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, '8 மணி நேர வேலை என்பது அனைத்து தொழிற்சங்கங்களாலும் ஏற்கப்பட்டது. அ.தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தாலும் தொழிலாளர்களின் கண்ணீரை துடைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிக்கைகளை தொடர்ந்து விடுத்து வருகிறார்' என்றார். இதில் முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. பூந்துறை பாலு, பகுதி செயலாளர்கள் கோவிந்தராஜன், கேசவமூர்த்தி, தங்கமுத்து, சங்க நிர்வாகிகள் வீரமணி, செல்வம், நல்லசாமி, சிவசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story