அ.தி.மு.க. வினர் திடீர் போராட்டம்


அ.தி.மு.க. வினர் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் அ.தி.மு.க. கொடி கம்பம் அமைக்க அதிகரிகள் அனுமதி மறுத்ததால் ஆத்தரம் அடைந்த அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம்

அ.தி.மு.க. தொடக்கவிழா

அ.தி.மு.க. வின் 51-வது ஆண்டு தொடக்க விழா இன்று(திங்கட்கிழமை) கொண்டாடப்படவுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. அறிவுறுத்தலின் பேரில் விழாவை கொண்டாட அக்கட்சியினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதன்படி மாவட்டம் முழுவதும் ஏற்கனவே உள்ள அ.தி.மு.க. கொடிகம்பங்களை புதுப்பித்து கட்சிகொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. ஆனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் அ.தி.மு.க. கொடிகம்பங்களை அமைப்பதற்கு வருவாய் மற்றம் காவல்துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பதாக அ.தி.மு.க.வினர் புகாா் தெரிவித்தனர்.

திடீர் போராட்டம்

விழுப்புரம் நகராட்சி 18-வது வார்டுக்குட்பட்ட கிழக்கு சண்முகபுரம் பகுதியில் நகர செயலாளர் பசுபதி தலைமையில் ஏற்கனவே அங்கிருந்த அ.தி.மு.க. கொடி கம்பத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் இங்கு கொடி கம்பம் அமைப்பதற்கு அனுமதியில்லை எனவும், கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக கூறி தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க.வை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

பின்னர் அ.தி.மு.க. நகர செயலாளர் பசுபதி, கோலியனூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு ஆகியோர் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கொடி கம்பம் அமைக்க அனுமதி இல்லை, மீறினால் இடிக்க நேரிடும் என அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது கொடிகம்பம் அமைக்க அனுமதி கேட்டு மனு கொடுங்கள். பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அ.தி.மு.க.பினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரப்பரப்பு ஏற்ப்பட்டது.


Next Story