அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா


அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா
x

அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி

அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அ.தி.மு.க.

அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், அவைத்தலைவர் அய்யப்பன், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைசெயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைைமயில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் முன்னாள் அரசு கொறடா மனோகரன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநகர செயலாளர் முத்துக்குமார், கவுன்சிலர் அரவிந்தன் மற்றும் கே.டி.அன்புரோஸ், வனிதா, வக்கீல் ஜெயராமன், இப்ராம்ஷா உள்ளிட்ட ஏராளமாேனார் கலந்து கொண்டனர். இதேபோல் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைப்பு செயலாளர் வளர்மதி மற்றும் நிர்வாகிகள் பொன்செல்வராஜ், சிறுபான்மை பிரிவு புல்லட் ஜான், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், முத்துகருப்பன், செல்வராஜ், நடராஜ், கோபால், ஆமூர்.ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காட்டுப்புத்தூர் நகர அ.தி.மு.க.சார்பில் நகர செயலாளர் கே.ஆர். ராமச்சந்திரனின் தலைமையில் ஒன்றிய அவைத் தலைவர் கே.வி.பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

ஓ.பன்னீர் செல்வம் அணி

இதேபோல் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டில், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் வக்கீல் ராஜ்குமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு தலைமையில் பகுதி செயலாளர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ம.தி.மு.க.-தே.மு.தி.க.

ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி.சி.சேரன் ஆகியோர் தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தே.மு.தி.க. சார்பில் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையிலும், புதிய நீதி கட்சி புறநகர் எஸ்.பாலுப்பிள்ளை தலைமையிலும், திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையிலும் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அ.ம.மு.க.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி மாநகர மாவட்ட செயலாளரும், கவுன்சிலருமான செந்தில்நாதன், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜசேகர், அமைப்பு செயலாளர் முன்னாள் மேயர் சாருபாலாதொண்டைமான் ஆகியோர் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story