அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
சுரண்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
சுரண்டை:
தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆலோசனையின்படி, சுரண்டையில் பூத் கமிட்டி மற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடந்தது. சுரண்டை நகர செயலாளரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், நகராட்சி 8-வது வார்டு உறுப்பினருமான வி.கே.எஸ்.சக்திவேல் தலைமை தாங்கினார். முன்னாள் நகர செயலாளர் சேக்மைதீன், அவைத்தலைவர் கவிதாமுருகையா, சந்திரன், மகளிர் அணி நிர்வாகிகள் தாமரைபுஷ்பா, தேனம்மாள் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி கவுன்சிலர் வசந்தன் வரவேற்றார்.
பூத் கமிட்டி நிர்வாகிகளின் கடமைகள், மகளிர் அணியினர், இளைஞர் இளம்பெண்கள் பாசறையினரின் பணிகள், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து வீடு வீடா சென்று பொதுமக்களிடம் விளக்கிக் கூறி இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வார்டு செயலாளர்கள் பவுன்ராஜ், மாரிசெல்வம், முத்துராஜ், ஜெபராஜ், சேகர், வெள்ளைச்சாமி, கணேசன், பரமசிவம், குமரேசன், செல்வம், ஜெயச்சந்திரன், கோபால், சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கழக பேச்சாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.