அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 19 Jun 2023 12:16 AM IST (Updated: 19 Jun 2023 12:00 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் மேல முன்னீர்பள்ளம், பொன்னாக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை என்.கணேசராஜா தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயணபெருமாள், மாவட்ட பாசறை செயலாளர் முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story