அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 


அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 
x

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைப்பு செயலாளர் ராமு கலந்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது.

முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும், அமைப்பு செயலாளருமான ராமு கலந்து கொண்டு பேசுகையில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரும் நிலையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மகளிர் குழுவினர் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கயை தேர்வு செய்து விரைந்து 2 நாட்களில் முடிக்க வேண்டும். என்றார்.

கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை செயலாளர் பெருமாள் நகர் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. அரங்கநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் குணசேகரன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுனில்குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனி, இளைஞர் அணி துணைச் செயலாளர் சீனு, பேரவை துணைத்தலைவர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயபிரகாஷ், கலியபெருமாள், சரவணன், தொப்பளான், கோவிந்தராஜ், ராமச்சந்திரன், பேரூராட்சி செயலாளர்கள் செல்வமணி, முருகன் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story