அ.தி.மு.க. தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிப்பு
திருவெண்ணெய்நல்லூரில் அ.தி.மு.க. தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
விழுப்புரம்
திருவெண்ணெய்நல்லூர்:
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி கடைவீதியில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள், அந்த தண்ணீர் பந்தலை தீ வைத்து எரித்தனர். இதில் அந்த பந்தல் முழுமையாக எரிந்து சேதமானது. இது குறித்து அ.தி.மு.க. நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலுபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க.வினர் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story