அ.தி.மு.க. பிரமுகர் பலி


அ.தி.மு.க. பிரமுகர் பலி
x

எரியோடு அருகே நடந்த விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

எரியோடு அருகே உள்ள வெல்லம்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 45). அ.தி.மு.க. கிளை செயலாளர். நேற்று முன்தினம் மாலை இவர், புதுரோடு பகுதிக்கு சென்று மளிகைகடையில் அரிசி வாங்கினார். பின்னர் அரிசி மூட்டையை தனது மொபட்டில் வைத்து கொண்டு, புதுரோடு-வேடசந்தூர் சாலையில் நாகையகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு முனியாண்டி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே பள்ளிக்கூடத்தானூரை சேர்ந்த அப்பாக்காளை (60) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், மொபட் மீது நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முனியாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அப்பாக்காளை படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அப்பாக்காளைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story