மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
களியக்காவிளை, ரீத்தாபுரத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குளச்சல்:
களியக்காவிளை, ரீத்தாபுரத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
பால், மின் கட்டண உயர்வை கண்டிப்பது, குளச்சல் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும், சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரீத்தாபுரம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பேரூர் செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய இணை செயலாளர் சுபா, பேரூர் அவைத்தலைவர் பால்ராஜ், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் பிரின்ஸ்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், பொருளாளர் ஆர்.ஜே.கே.திலக், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்சன், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை, குளச்சல் நகர முன்னாள் செயலாளர் பசீர் கோயா, கிளை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
களியக்காவிளை
இதேபோல் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்தும், திருமண நிதி உதவி நிறுத்தம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் களியக்காவிளையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு களியக்காவிளை பேரூர் பொருளாளரும் பேரூராட்சி உறுப்பினருமான பாபு தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் நசீர், பேரூர் முன்னாள் செயலாளர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேல்புறம் ஒன்றிய செயலாளர் ஆல்பர்ட்சிங், கட்சி நிர்வாகிகள் சுகுமாரன்நாயர், செய்யதுஅலி, வக்கீல் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.