அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
தேசூர், மழையூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு அருகே தேசூர், மழையூரில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் தலைமை தாங்கினார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.எஸ்.அன்பழகன், மாவட்ட அவைத்தலைவர் மணி, ஒன்றிய செயலாளர்கள் பச்சையப்பன், தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பூத் கமிட்டி மற்றும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு ஆலோசனை வழங்கினர்.
மேலும் கூட்டத்தில் இளைஞர், இளம்பெண் பாசறையை சேர்ந்தவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து தெள்ளார் ஒன்றியம் தேசூர் பேரூராட்சியில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டது.
கூட்டத்தில் பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தேசூர் நகர செயலாளர் பன்னீர், சோலையா, அருக்காவூர் சந்திரசேகர் மற்றும் பல்வேறு பிரிவை சேர்ந்த அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.