அ.தி.மு.க. நிர்வாகி மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
அதிமுக நிர்வாகி மரணத்திற்கு அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. டெல்லி மாநில அலுவலக செயலாளர் என்.சந்திரசேகரன் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணா துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அதேபோல அ.தி.மு.க. கலைப்பிரிவு இணை செயலாளரும், நட்சத்திர பேச்சாளருமான சினிமா இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனின் தந்தை பொன்.சின்னத்துரை உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
இவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், உயிரிழந்தோரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story