அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2023 1:00 AM IST (Updated: 20 Oct 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கம்புணரியில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கிருங்காகோட்டையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் திருவாசகம் தலைமை தாங்கினார். சிங்கம்புணரி நகர செயலாளர் வாசு, பாம்கோ சேர்மன் ஏவி நாகராஜன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் கலந்து கொண்டு பேசினார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் உமாதேவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பொன்மணி பாஸ்கரன், தலைமை கழக பேச்சாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். கிருங்காக்கோட்டை கிளை செயலாளர் அசோகன் நன்றி கூறினார்.

இதில், ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு, துணை தலைவர் சரண்யா ஸ்டாலின், துளாவூர் பார்த்திபன், பிரான்மலை கருப்பையா, சந்திரன் மற்றும் நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.


Next Story