வைத்தீஸ்வரன் கோவிலில் அ.தி.மு.க பொதுக்கூட்டம்
வைத்தீஸ்வரன் கோவிலில் அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பங்கேற்றார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் மேல வீதியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூர் கழக செயலாளர் போகர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் செல்லையன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், நற்குணன், சிவக்குமார், நகர கழக செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் பவுன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாரதி, சக்தி ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று பேசினர். இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரமோகன், பூராசாமி, ராதாகிருஷ்ணன், என்ஜினீயர் மார்க்கோனி, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர்கள் கழக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.