அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டம்


அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூரில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டப்பட்டது

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூரில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் பஸ்நிலைய நுழைவு வாயில் முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பழைய பஸ்நிலையம் அருகே உள்ள கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. கட்சியின் அமைப்புச் செயலாளரும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அ.மனோகரன் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு லட்டு, கேசரி, இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் சீமான் மணிகண்டன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சின்னதுரை, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் உள்ளார் மூர்த்தி, நகர இளைஞரணி முருகன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் குருசாமி, பாலசுப்பிரமணியன் உட்பட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் சீமான் மணிகண்டன் செய்திருந்தார்.

* தென்காசி வடக்கு மாவட்டம் கடையநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் நகர கழக அலுவலகம் அருகே உள்ள கட்சியின் கொடிக்கம்பத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் கடையநல்லூர் ஒன்றியம் துரைச்சாமிபுரத்தில் கட்சி கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.


Next Story