அ.தி.மு.க. ஆட்சி தான் மக்களுக்கு பொற்கால ஆட்சி;முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பெருமிதம்
அ.தி.மு.க. ஆட்சி தான் மக்களுக்கு பொற்கால ஆட்சி என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.
அ.தி.மு.க. ஆட்சி தான் மக்களுக்கு பொற்கால ஆட்சி என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.
தீவிர வாக்கு சேகரிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நேற்று, ஈரோடு பெரியார் நகர் ராஜாகாடு மெயின் வீதி, கோவிந்தராஜ் நகர், எஸ்.கே.சி.ரோடு, பெரியார் நகர் 80 அடி சாலை, கருப்பண சாமி வீதி, சிதம்பரம் காலனி பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ண மூர்த்தி, விஜயபாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பலர் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்குகள் சேகரித்தனர்
பொற்கால ஆட்சி
முன்னதாக ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி பூசாரி சென்னிமலை வீதியில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டு இருந்த பணிமனையை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சிறப்பாக உள்ளது. எதிர் அணி வியக்கத்தக்க வகையில் இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி மக்களுக்கான சிறந்த ஆட்சியாக இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் தான் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் 2 முறை வெற்றி பெற்றாலும் கூட ஈரோடு கிழக்கு தொகுதியிலோ, மாவட்டத்திலோ எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அ.தி.மு.க. ஆட்சி தான் ஈரோடு மக்களுக்கு பொற்கால ஆட்சியாக இருந்தது.
திருப்புமுனை
எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் தேர்தல், ஜெயலலிதாவுக்கு மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி தேர்தல், அதே போன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈரோடு கிழக்கு தேர்தல் திருப்புமுனையாக அமையும். எத்தனை தடை இருந்தாலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெறுவார்.
மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று நிரந்தர முதல் -அமைச்சர் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.