இடைச்சிவிளையில் அ.தி.மு.க. கொடியேற்று விழா
இடைச்சிவிளையில் அ.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது,.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில் இடைச்சிவிளையில் அ.தி.மு.க. ஆண்டுவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது. விழாவில் சாத்தான்குளம் யூனியன் துணைத்தலைவர் அப்பாத்துரை தலைமையில் கட்சி கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோன்று, புதுக்குளம் கிராமத்தில் அ.தி.மு.க. ஆண்டுவிழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்றப்பட்டது. இதில் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கோபால், கிளை செயலாளர் உலகநாதன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பாலமேனன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story