மதுரையில் நடக்கும் அ.தி.மு.க. மாநாட்டிற்குகரூர் மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் செல்ல ஏற்பாடு


மதுரையில் நடக்கும் அ.தி.மு.க. மாநாட்டிற்குகரூர் மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் செல்ல ஏற்பாடு
x

மதுரையில் நடக்கும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு கரூர் மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளத.

கரூர்

மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை விளம்பர படுத்தும் விதமாக கரூரில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர்கள் ஓட்டி விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதனை கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரையில் நடக்கும் மாநாடு தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாநாடாக அமையும். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வால் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த மாநாட்டின் மூலம் தி.மு.க.வை ஆட்சியை விட்டு அகற்றப்படும் சூல்நிலை உருவாகும். மாநாட்டில் கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் செல்ல ஏற்பாடு செய்து வருகிேறாம்.

மாநாட்டிற்காக சுவர் விளம்பரமும் செய்து வருகிறோம். அதை சிலர் தடுத்து வருகின்றனர். அதனால் மாநாட்டு கூட்டத்தை தடுத்து விட முடியாது. அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டி அது என்ன பஸ் என்றே தெரியாத நிலை உள்ளது. இது வரை முறை மீறிய செயல். இதனால் விபத்துகள் ஏற்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அ.தி.மு.க. மாவட்ட அமைப்பு செயலாளர் சின்னசாமி, அவைத்தலைவர் திருவிகா, பொதுக்குழு ஊறுப்பினர் சிவசாமி, மாவட்ட இணை செயலாளர் மல்லிகாசுப்பராயன், ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story