முதுகுளத்தூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


முதுகுளத்தூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது

ராமநாதபுரம்

முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்றது. முதுகுளத்தூர் பேரூர் செயலாளர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முனியசாமி பாண்டியன், காளிமுத்து, அந்தோணிராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் குமரைய்யா தேவர், மாவட்ட கவுன்சிலர் நவஜோதி பிரவீன் குமார், சாயல்குடி நகர செயலாளர் ஜெயபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகுளத்தூர் ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார், சண்முகையா பாண்டியன் வரவேற்றனர். தலைமை பேச்சாளர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் முனியசாமி, பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்தையா, சதன் பிரபாகரன் ஆகியோர் பேசினா். இதில், விவசாய அணி இணைச்செயலாளர் கர்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோவிந்த ராமு, ஒன்றிய அவை தலைவர் கருப்பசாமி, மாவட்ட அவை தலைவர் கருப்பசாமி, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ரத்தினம், ஊராட்சி தலைவர்கள் ஆத்திகுளம் ஆனந்தநாயகி முத்துராமலிங்கம், ஆதனக்குறிச்சி கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் கோதண்டம், விவசாய அணி அம்சராஜ், பூசேரி அருண்குமார், குருசாமி, நகர துணை செயலாளர் முத்துராமன், பொருளாளர் மலைக் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு கட்சியில் இருந்து விலகி 20-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.


Next Story