நெமிலி, பனப்பாக்கத்தில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா


நெமிலி, பனப்பாக்கத்தில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா
x

நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கத்தில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து பனப்பாக்கம், காவேரிப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில் மாவட்ட துணை செயலாளர் என்.டி.பி.தயாளன், நெமிலி ஒன்றிய செயலாளர்கள் ஏ.ஜி.விஜயன், கே.வி.ஆர்.அருணாபதி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அன்பரசு, பேரூர் செயலாளர்கள் மஞ்சுநாதன் (காவேரிப்பாக்கம்), செல்வம் (நெமிலி), நெமிலி நகர பொருளாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய மாணவரணி செயலாளர் முருகன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி புருஷோத்தமன், மேலேரி திருமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story