ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்


அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரியும், ஊழல், முறைகேடுகள், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க.அரசை கண்டித்தும் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். நகர் செயலாளர் என்ஜினீயர் பால்பாண்டியன் வரவேற்றார்.

முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் முத்தையா, சதன்பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அவை தலைவர் சாமிநாதன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை தலைவர் ஆர்.ஜி.ரெத்தினம், மண்டபம் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆனிமுத்து, சுந்தரபாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், மாவட்ட மீனவரணி செயலாளர் எம்.எஸ்.அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோஷம்

மேலும் ராமேசுவரம் நகர் செயலாளர் அர்ச்சுணன், நகர் அவை தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் நகர் செயலாளர் கே.சி.வரதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு சரவணக்குமார், ராமசேது, மாணவரணி செயலாளர் செந்தில்குமார், எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், துணை செயலாளர் எஸ்.கே.ஜி.செல்வராஜ், மகளிரணி ஜெய்லானி, ராம்கோ தலைவர் சுரேஷ், இயக்குனர் தஞ்சி சுரேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர் செயலாளர் பால்பாண்டியன் கோஷங்களை முழங்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர் கலந்துகொண்டனர்.


Next Story