உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வேலை பார்த்து வந்த 28 பணியாளர்களை திடீரென அதன் நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியது. இதனை தொடர்ந்து நீக்கப்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுங்கச்சாவடியில் நீக்கப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், பணி நீக்கம் செய்யப்பட்ட சங்கச்சாவடி பணியாளர்களுக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும், மேலும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ.பிரபு, ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ் செண்பகவேல், சந்திரன், ஏகாம்பரம், ராஜசேகர், ஆப்பிள் ரவி, அரசு, நகர செயலாளர்கள் துரை, பாபு, நகர துணை செயலாளர் கிருஷ்ணராஜ், ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், மாவட்ட பேரவை செயலாளர் ஞானவேல், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story