அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகி, கணவருடன் கைது


அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகி, கணவருடன் கைது
x

அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகி, கணவருடன் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 42). இவருடைய மனைவி அமல்ராணி (40). மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி துணை தலைவராக உள்ளார். இவர்கள் இருவரும் விருதுநகர் கருப்பசாமி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு ஒரு இளம் பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.இதுபற்றி தகவல் அறிந்த பாண்டியன் நகர் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். பின்னர் அந்த தம்பதி பயன்படுத்திய கார் மற்றும் வீட்டில் இருந்த ஆணுறைகளை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்திரசேகரன், அமல்ராணி ஆகிய 2 பேரையும் விபசார தடுப்புச்சட்டத்தின் கீழ் ேபாலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story