அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மதுரையில் நடைபெறும் எழுச்சி மாநாடு குறித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
பரமக்குடி,
மதுரையில் நடைபெறும் எழுச்சி மாநாடு குறித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டம்
மதுரையில் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 20-ந் தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பரமக்குடி ஏ.பி.ஷா. மஹாலில் நடந்தது. கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்தையா, சதன் பிரபாகர், ஒன்றிய செயலாளர்கள் பரமக்குடி முத்தையா, நயினார் கோவில் குப்புசாமி, போகலூர் லோகிதாசன் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் செயலாளர் ஜமால் வரவேற்றார்.
கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர்கள் செங்கோட்டையன், தங்கமணி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, மகளிர் அணி செயலாளர் வளர்மதி, அமைப்பு செயலாளர்கள் செல்லூர் ராஜூ, கோகுல இந்திரா, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், மாநில மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினர்.
அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி
தொடர்ந்து துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி பேசியதாவது:- இந்திய அரசியலில் மிகப்பெரிய புயல் மையம் கொண்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அடுத்த பிரதமர் யார்? என்பதை தமிழ்நாடுதான் முடிவு செய்யும். அகில இந்திய அளவில் ஒரு கூட்டணியில் மு.க.ஸ்டாலின் இடம் பெற்றுள்ளார். அதேபோல பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை மையப்படுத்திதான் கூட்டணி அமைந்துள்ளது. அந்த கூட்டணியில் மு.க.ஸ்டாலினுக்கு உள்ள முக்கியத்துவத்தை விட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மோடி முக்கியத்துவம் அளித்துள்ளார்.
மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி 2-வது இடத்தில் அமர்ந்தார். மதுரையில் நடைபெற உள்ள மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராமநாதபுரம் நாடாளுமன்றம் தொகுதியை பல தலைவர்கள் குறிவைத்துள்ளனர். தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும்தான் நேரடி போட்டி.
மதுரை மாநாடு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் மதுரை மாநாடு அமைய வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 25 லட்சம் குடும்பங்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சேது பாலசிங்கம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆனி முத்து, சுந்தரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆர்.ஜி. ரெத்தினம், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் பாதுஷா, பாலாமணி மாரி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி, நயினார் கோவில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் தேர்த்தங்கல் பூமிநாதன், கூட்டுறவு சங்க தலைவர் தனபாலன், நயினார்கோவில் மாவட்ட கவுன்சிலர் ஜெகதீஸ்வரி சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி கனகராஜ், பரமக்குடி நகர் பொருளாளர் கிருஷ்ணன், நகர் ஜெயலலிதா பேரவை பொருளாளர் வாலா ரவீந்திரன், இணை செயலாளர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் மாநில மருத்துவ அணி துணைசெயலாளர் மணிகண்டன், ராமநாதபுரம் நகர்செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட மாணவர்அணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர்கள் நேதாஜி, செல்வராஜ், இளைஞர் அணி காளீஸ்வரன், மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பரமக்குடி நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர், நகர் மன்ற உறுப்பினர் வடமலையான் நன்றி கூறினார்.