அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2023 12:15 AM IST (Updated: 21 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. பேசுகையில் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் நியமனம், மகளிர் குழு நிர்வாகிகள் நியமனம், இளைஞர் இளம்பெண் பாசறை அமைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கி நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் வி.பி.மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் பொய்கை சோ மாரியப்பன், பொருளாளர் சண்முகையா, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், அண்ணா தொழிற்சங்க முன்னாள் மண்டல செயலாளர் கந்தசாமி பாண்டியன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஆர்.ராமசந்திரன், செல்லப்பன், ஜெயகுமார், ரமேஷ், மகாராஜன், செல்வராஜ், துரைப்பாண்டியன், வசந்தம் முத்துபாண்டியன், வேல்முருகன், நகர செயலாளர்கள் கணேசன், எம்.கே.முருகன், பரமேஸ்வர பாண்டியன், பேரூர் செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், முத்துக்குட்டி, பாலசுப்பிரமணியன், சேவகபாண்டியன், நல்லமுத்து, அலியார், கார்த்திக் ரவி, அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ராமையா, பொருளாளர் ஆத்மாநாதன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஞானராஜ், ஜாஹீர்உசேன், தனபால், வழக்கறிஞர்கள் அருண், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story