அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2023 12:15 AM IST (Updated: 23 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சண்முகையா வரவேற்றார்.

கூட்டத்தில் கிருஷ்ணமுரளி எம்.எல்ஏ. பேசுகையில், "விரைவில் வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் தெருமுனை பிரசாரம் மற்றும் திண்ணை பிரசாரங்களுக்கு தயாராக வேண்டும்" என்றார். தொடர்ந்து சங்கரன்கோவில் பொதுக்கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற உழைத்த நிர்வாகிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

கூட்டத்தில் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவ ஆனந்த், அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமி பாண்டியன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் நன்றி கூறினார்.


Next Story