அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பாவூர்சத்திரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், துணைச்செயலாளர் வீரபாண்டியன், பொருளாளர் சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் கசமுத்து, பாண்டியராஜ், தொழிற்சங்கம் கந்தசாமி பாண்டியன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் காத்தவராயன், சந்திரகலா, பிரேம்குமார், கிருஷ்ணசாமி, முகிலன், சுப்பையா, சிவசீதாராமன், சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், அமல்ராஜ், இருளப்பன், பாண்டியன், ஜெயக்குமார், அருவேல்ராஜ் முருகேசன், பாலகிருஷ்ணன், நகர செயலாளர்கள் சுடலை, சக்திவேல், பேரூர் செயலாளர்கள் கணேஷ் தாமோதரன், ஜெயராமன், கார்த்திக்குமார், முத்துராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.