அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா


அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா
x
தினத்தந்தி 4 May 2023 6:45 PM GMT (Updated: 4 May 2023 6:46 PM GMT)

செம்பனார்கோவிலில் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா ஓ.எஸ்.மணியன் பங்கேற்றார்.

மயிலாடுதுறை

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கடைவீதியில் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார்.மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பவுன்ராஜ் முன்னிலை வகித்தார். செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் ஜெனார்தனம் வரவேற்றார். விழாவில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் மாநில அமைப்பு செயலாளருமான ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் அண்ணா தி.மு.க. என்ற தொண்டர்கள் இயக்கத்தில் மட்டுமே சாதாரண தொண்டர்கள் உயர்ந்த பதவிக்கு வர முடியும். ஆனால் தி.மு.க.வில் பரம்பரை குடும்ப வாரிசுகள் மட்டுமே தலைமை பதவிக்கு வர முடியும் என்றார். வேதாரண்யத்தில் யூடியூபில் அவதூறு பரப்பியதாக ஒரு பட்டதாரி இளைஞரை கைது செய்த அரசு, முப்பதாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக ஆடியோ வெளியிட்டவர்களை ஏன் கண்டுபிடிக்கவில்லை. இதிலிருந்து இது உண்மையான ஆடியோ என்று தெரிய வருகிறது. தற்போதைய நிலையில் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது தொண்டர்கள் இதற்காக தயாராக இருக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட கழக அவை தலைவர் பாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சக்தி, ஒன்றிய செயலாளர்கள், ராதாகிருஷ்ணன், கண்ணன் மாவட்டம்,நகரம் ஒன்றியம், பேரூர் கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அ.தி.மு.க, தொண்டர்கள், அண்ணா தொழிற்சங்கத்தினர் திரளானோர் பங்கேற்றனர் முடிவில் தொழிற்சங்க மண்டல பொருளாளர் நமச்சிவாயம் நன்றி கூறினார்.


Next Story