ஜெயலலிதா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
ஈரோட்டில் ஜெயலலிதா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஈரோட்டில் ஜெயலலிதா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நினைவு தினம் அனுசரிப்பு
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மறைந்த முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
முன்னதாக கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட் டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி, பகுதி செயலாளர்கள் மனோகரன், கே.சி.பழனிச்சாமி, ஜெகதீஷ், கோவிந்தராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவர் அணி இணைச்செயலாளர் நந்தகோபால், வக்கீல் அணி மாவட்ட தலைவர் துரை சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் கே.எஸ்.கோபால், பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா, கங்காபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.பொங்கி, வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.ஆர்.ஜி.மூர்த்தி, நிர்வாகிகள் சூரிய சேகர், மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மலர் தூவி மரியாதை
இதேபோல் ஈரோடு பெரியார் நகர் பகுதி அ.தி.மு.க. சார்பில் பெரியார் நகர் பகுதியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பெரியார் நகர் பகுதி செயலாளர் ரா.மனோகரன் தலைமை தாங்கி, ஜெயலலிதா உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பூந்துறை பாலு, முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், அவைத்தலைவர் பாலச்சந்தர், அண்ணா தொழிற்சங்க தலைவர் மின்மினி, மாநகர பிரதிநிதி ஆஜம், மாவட்ட பிரதிநிதி சண்முகம், பகுதி துணைச்செயலாளர் வெள்ளியங்கிரி, முன்னாள் கவுன்சிலர்கள் பரமசிவம், சுப்பிரமணி, நாச்சிமுத்து, வட்ட செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.