அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:45 AM IST (Updated: 11 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தியும், மானங்கொண்டானாறு, முள்ளியாறு ஆகிய ஆறுகளில் ஆகாயத்தாமரைகளை அகற்றக்கோரியும் வாய்மேடு கடைத்தெருவில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. அவை தலைவர் நெடுமாறன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் நடராஜன் வரவேற்றார். ஒன்றிய இணை செயலாளர் தேவிசெந்தில், மாவட்ட பிரதிநிதிகள் மீனாட்சி சுந்தரம், உஷா மாரிமுத்து, பாசறை செயலாளர் மாணிக்கவாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், கிரிதரன், நகர செயலாளர் நமசிவாயம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் அமுதன், ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் மலர் மீனாட்சி சுந்தரம், ராமையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் வீரமணி நன்றி கூறினார்.


Next Story