அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள சண்முகநல்லூரில் தி.மு.க. அரசின் மின் கட்டணம், பால் விலை, சொத்துவரி உயர்வை கண்டித்து மேலநீலிதநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் ராமசுப்பிரமணியன், டாக்டர் திலீபன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

* கடையநல்லூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து ெகாண்டனர்.

* பாவூர்சத்திரம் பஸ்நிலையம் அருகில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ், இருளப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* ஆலங்குளம் அருகே குறிப்பன்குளம் கிராமத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி. பிரபாகரன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story