வாலாஜாபாத்தில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்ற எதிர்ப்பு


வாலாஜாபாத்தில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்ற எதிர்ப்பு
x

வாலாஜாபாத்தில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம்

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு உத்திரமேரூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பத்தை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பொதுக்கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் பழனி, மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் என்.ஆர்.பழனி, ஒன்றிய செயலாளர்கள் அக்ரி நாகராஜன், அத்திவாக்கம் ரமேஷ், தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜூ, பிரகாஷ் பாபு, தங்க பஞ்சாட்சரம், வாலாஜாபாத் பேரூராட்சி செயலாளர் அரிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story