நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்
நாகையில், அமுன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து நாகையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் ஜீவானந்தம், அமைப்பு செயலாளர் ஆசை மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தங்க. கதிரவன் வரவேற்றார். எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பினர்..தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Related Tags :
Next Story