நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 May 2023 6:45 PM GMT (Updated: 29 May 2023 6:46 PM GMT)

நாகையில் தி.மு.க. அரசை கண்டித்து, ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்


நாகையில் தி.மு.க. அரசை கண்டித்து, ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நாகை அபிராமி அம்மன் திடலில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அவைத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தங்க கதிரவன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, கள்ளச்சாராய விற்பனைக்கு தமிழக அரசு துணை போகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தி.மு.க. ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் அதிகரித்து விட்டன.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு

எனவே வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. அரசுக்கு புதிய பாடம் புகட்ட வேண்டும் என்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் சண்முகராசு நன்றி கூறினார்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் ஏற்படும் உயிரிழப்புகளை கண்டித்தும், இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்து விட்டதாக கூறியும், தி.மு.க. அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள் உள்பட கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story