அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூர்
மின்கட்டண உயர்வை கண்டித்து வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
அதன்படி வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், இணை செயலாளர் சுகன்யா தாஸ், துணை செயலாளர் ஜெயப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் குட்டிலட்சுமி சிவாஜி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
பொய் வழக்கு
ஆர்ப்பாட்டத்தில், கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு மேலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும்.
எனவே அதனை திரும்ப பெற வேண்டும். அ.தி.மு.க.வினர் மீது பொய்வழக்கு போடுவதை கைவிட வேண்டும்.
போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை தமிழகத்தில் காணப்படுகிறது.
சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் ரவிபாபு, காட்பாடி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் அமர்நாத், விவசாய அணி மாவட்ட செயலாளர் சுந்தரராஜி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் எம்.ஏ.ராஜா,
வக்கீல் அணி மாவட்ட செயலாளர் பாலசந்தர், மாநகராட்சி கவுன்சிலர் அருணாவிஜயகுமார், பகுதி பொருளாளர் ஜி.எஸ்.ஏ.ஆறுமுகம், வட்ட செயலாளர் சி.கே.எஸ்.வினோத்குமார், நிர்வாகி பி.எஸ்.பழனி உள்பட அணி மாவட்ட செயலாளர்கள், பகுதி பொருளாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.