அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x

ஆரணி, செய்யாறு, வந்தவாசியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி, செய்யாறு, வந்தவாசியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

ஆரணி நகர அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசு கண்டித்து கண்டித்து ஆரணி நகராட்சி அலுவலகம் எதிரே முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆவின் தலைவரும், நகரமன்ற துணைத்தலைவருமான பாரி பி.பாபு, நகரமன்ற உறுப்பினர்கள் வி.பி.ராமகிருஷ்ணன், ரம்யா குமரன், ஏ.ஜி.மோகன், தேவராஜ், விநாயகம், நடராஜன், நவநீதம், சிவக்குமார் உள்பட உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அசோக்குமார் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில், ஆரணி நகராட்சிக்கு மட்டும் நான் அமைச்சராக இருந்து சுமார் ரூ.8½ கோடி நிதியை பெற்று தந்தேன்.

ஆனால் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. மீதமுள்ள தொகைக்கான பணிகளை மேற்கொள்ளாமலேயே அந்த நிதியினை பல்வேறு திட்டத்திற்கு வழங்கி முறைகேடு செய்து வருகின்றனர்.

மேலும் காவிகூட்டு குடிநீர் திட்டம் ஆரணி நகராட்சிக்கு கொண்டு வரப்பட்டது. முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் இருந்து அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை தி.மு.க.வினர் அவர்கள் கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர்.

இன்று அத்தியாவசிய பொருட்கள் அனைத்திலும் விலை ஏற்றம் செய்யப்பட்ட தமிழக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறோம் என்றார்.

தொடர்ந்து தமிழகத்தில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பாபுமுருகவேல், மாவட்ட பொருளாளர் அ.கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கே.சங்கர், ஜி.வி.கஜேந்திரன், ஜெய்பிரகாஷ், திருமால், கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். முடிவில் நகர மாணவரணி செயலாளர் குமரன் நன்றி கூறினார்.

செய்யாறு

செய்யாறில் நகர அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர்.

இதில் பொதுக்குழு உறுப்பினர் அருணகிரி, ரவிச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் ப.கோபால், கோவிந்தராஜ், டி.பி.துரை, வெங்கடேஷ், குமரேசன், செந்தில், நகர அவைத்தலைவர் ஜனார்த்தனன், ஒன்றிய செயலாளர்கள் எம்.மகேந்திரன், அரங்கநாதன், வே.குணசீலன், சி.துரை, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வந்தவாசி

வந்தவாசி நகராட்சி அலுவலகம் முன்பு நகர செயலாளர் பாட்சா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ெஜயலலிதா பேரவை செயலாளர் சத்தியவாடி பாஸ்கர் ரெட்டியார், மாவட்ட அவைத்தலைவர் டி.கே.பி.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் ஜெ.பாலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பவானி அன்பழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் லோகேஷ்வரன், தெள்ளார் ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் அரஜுனன், ஜெயலலிதா பேரவை மேகநாதன், ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story