அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x

மாதனூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே மாதனூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 ஆயிரம் வழங்காது ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி ராமலிங்க ராஜா, ஆம்பூர் நகர செயலாளர் மதியழகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் டில்லி பாபு, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வெங்கடேசன், வாணியம்பாடி நகர செயலாளர் சதாசிவம் மற்றும் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story