அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x

வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பால்விலை, மின் கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து அணைக்கட்டு பஸ் நிறுத்தத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன் தலைமை தாங்கினார்.

குருவராஜ பாளையத்தில் அணைக்கட்டு மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஆனந்தன் தலைமையிலும், அணைக்கட்டு பஸ் நிலையத்தில் அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் பாபுஜி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமையிலும், ஊசூரில் மாவட்ட அவைத்தலைவர் சேட்டு தலைமையிலும், வேலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கணியம்பாடி ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ராகவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஹேமந்த், ஒடுகத்தூர் நகர செயலாளர் கோவிந்தராஜ், பள்ளிகொண்டா நகர செயலாளர் உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அணைக்கட்டு ஒன்றிய இளைஞரணி செயலாளர் த.சேரன் வரவேற்று பேசினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி, மின்கட்டணம், பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெறக்கோரியும் கோஷமிட்டனர். மேலும் போதைப்பொருட்கள் சகஜமாக நடமாட்டுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாகவும், முன்னாள் முதல்-அலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி விட்டதாகவும், இதை கண்டித்தும் கோஷமிட்டனர். நூற்றுக்கணக்கான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story