அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x

ஆற்காடு, திமிரி, சோளிங்கரில் விலை வாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ஆற்காடு, திமிரி, சோளிங்கரில் விலை வாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமிரி

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் சொறையூர் குமார், நா.வா.கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் அரக்கோணம் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, போதை பொருட்கள் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக தி.மு.க. அரசை கண்டித்து பேசினார்.

திமிரி ஒன்றிய அவைத் தலைவர் செங்கோடன், துணைச் செயலாளர்கள் ஜெயலட்சுமி சேகர், வெங்கடேஸ்வரன், சரளா பாஸ்கரன், திமிரி மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரமேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆற்காடு

ஆற்காடு கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.ஆர்.சீனிவாசன், ஒன்றிய அவைத்தலைவர்கள் அரங்கநாதன், வேப்பூர் மணி, துணைச்செயலாளர்கள் சங்கர், ரவி, மாவட்ட பிரதிநிதி பாலாஜி, ஒன்றியக் குழு உறுப்பினர் காஞ்சனா சேகர், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தா.கு.கணேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சோளிங்கர்

சோளிங்கர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சோளிங்கர் ஒன்றிய செயலாளர்கள் ஏ.எல்.விஜயன், பெல்.கார்த்திகேயன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சோளிங்கர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.சம்பத் கலந்து கொண்டு சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெறக்கோரியும் பேசினார்.

பெண்களுக்கு பாதுகாப்பின்மை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் கோஷமிட்டனர். தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் உடனடியாக கட்ட வேண்டும், ரூ.9 கோடியில் கட்டப்பட்ட கோர்ட்டு கட்டிடத்தை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் நகர செயலாளர் ராமு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஏ.எல்.சாமி, பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் கிழக்கு, மேற்கு ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story