அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நெல்லையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நெல்லையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நெல்லை வண்ணார்பேட்டையில் அ.தி.மு.க.வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

மருத்துவதுறை சீரழிவு

அப்போது, வீ.கருப்பசாமி பாண்டியன் பேசுகையில், 'தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. மதுக்கடையில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வசூல் செய்து அதிக அளவில் பணம் சம்பாதித்து வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் அமைச்சருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய முடியாத அளவிற்கு இந்த ஆட்சியில் மருத்துவத்துறை சீரழிந்துள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் வரும் அதிலும் நாம் வெற்றி பெறுவோம்' என்றார்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., ஏ.கே.சீனிவாசன், சுதாபரமசிவன், முன்னாள் எம்.எல்.ஏ.கள் மைக்கேல்ராயப்பன், ஆர்.பி.ஆதித்தன், ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா, எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், துணை செயலாளர் நாராயணபெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ராஜன்கிருபாநிதி, பொருளாளர் சவுந்தரராஜன், கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், இளைஞர் அணி செயலாளர் பால்துரை, மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி, வர்த்தக அணி செயலாளர் அம்மா செல்வகுமார், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டிபாண்டியன், அந்தோணி அமலராஜா, கே.பி.கே.செல்வராஜ், விஜயகுமார், வக்கீல் ஜெயபாலன், பகுதி செயலாளர் திருத்து சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சிலர் தங்களது உடலில் காய்கறி மாலை அணிவித்து வந்தனர்.


Related Tags :
Next Story