அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x

சுரண்டையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டையில் நகர அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். மன்ற நகர செயலாளர் கோட்டூர்சாமி பாண்டியன், துணை செயலாளர் மணிகுட்டி, நகர மகளிர் அணி செயலாளர் தேனம்மாள் தங்கராஜ், நகர துணை செயலாளர் சிவசங்கர், நகர்மன்ற துணைத்தலைவர் சங்கராதேவி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சக்திவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.கே.சண்முகசுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர் வீரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் கீழப்பாவூர் அமல்ராஜ், கீழப்பாவூர் கிழக்கு இருளப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Next Story