அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
முக்கூடலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
முக்கூடல்:
முக்கூடலில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பிரபாகரன் முன்னிலை வகித்தார். பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். முன்னாள் அமைச்சர் தாமோதரன், மூர்த்தி, கோதை தங்கவேல் மற்றும் மாநில பேச்சாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் கட்சி தொண்டர்களுக்கு இலவச தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆதிமூலம், சண்முகநாதன், செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆதி கணேஷ் நன்றி கூறினார். முக்கூடல் நகரச் செயலாளர் வில்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை அவைத்தலைவர் செல்லப்பா மற்றும் அ.தி.மு.க.வினர் செய்திருந்தனர்.