ஒற்றை தலைமை விவகாரம்; ஈபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை...!


ஒற்றை தலைமை விவகாரம்; ஈபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை...!
x

ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு இடையே பிளவு நிலவி வருகிறது.

இதற்கிடையே, அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்று காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் என்ற பெயரில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலோசனையில் செங்கோட்டையன், வளர்மதி, தம்பிதுரை, ஆர்.பி.உதயகுமார் உள்பட அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.


Next Story