அ.தி.மு.க. மாநில மாநாடு பிரசார வாகனம் தொடக்கம்


அ.தி.மு.க. மாநில மாநாடு பிரசார வாகனம் தொடக்கம்
x

அ.தி.மு.க. மாநில மாநாடு பிரசார வாகனம் தொடங்கியது.

அரியலூர்

அ.தி.மு.க. மாநில மாநாடு நாளை(ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த மாநாட்டிற்கு அனைவரையும் அழைக்கும் பிரசார வாகனத்தை அரியலூரில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தாமரை ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அவர் பேசுகையில், மாநாட்டிற்கு தொண்டர் படை குழுவின் பொறுப்பாளராக என்னை நியமித்துள்ளார்கள். வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு நடைபெறும் மதுரை மாநகருக்கு லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வர உள்ளனர். அனைவருக்கும் தங்குவதற்கு இடமும், உணவு மற்றும் குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் மாநாட்டிற்கு குடும்பத்துடன் வர வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.


Next Story