அ.தி.மு.க. நிர்வாகி காரில் பெட்ரோல் நிரப்பிய ஊழியருடன் டிரைவர் வாக்குவாதம்


அ.தி.மு.க. நிர்வாகி காரில் பெட்ரோல் நிரப்பிய ஊழியருடன் டிரைவர் வாக்குவாதம்
x

அ.தி.மு.க. நிர்வாகி காரில் பெட்ரோல் நிரப்பிய ஊழியருடன் டிரைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு செல்வதற்காக, இவரது காரில் டீசல் நிரப்புவதற்கு டிரைவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு ஓட்டிச்சென்றுள்ளார். அங்கு ஊழியர், அந்த காரில் டீசலுக்கு பதிலாக பெட்ரோல் போட தொடங்கினார். இதை கவனித்த டிரைவர் சத்தம் போட்டதால், அவர் பெட்ரோல் போடுவதை நிறுத்தினார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காரில் டீசலை நிரப்பிக்கொண்டு, டிரைவர் அங்கிருந்து காரை ஓட்டிச்சென்றார்.


Next Story