பஸ் நிலையத்தை இடம் மாற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு


பஸ் நிலையத்தை இடம் மாற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் பஸ் நிலையத்தை இடம் மாற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பஸ் நிலையத்தை இடம் மாற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நகராட்சி கூட்டம்

பொள்ளாச்சி நகராட்சி கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும், அனைத்து தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளிப்பதாக தி.மு.க. கவுன்சிலர் பெருமாள் எழுந்து கூறினார்.

பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா எழுந்து, சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர், தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது எல்லாம் பஸ் நிலையத்தை சி.டி.சி. மேட்டிற்கு இடமாற்றம் செய்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

பஸ் நிலையத்தை இடம் மாற்றுவதை கண்டித்தும், பொள்ளாச்சி நகரில் மேம்பாலம் கட்டக்கூடாது என்று வலியுறுத்தியும் வெளிநடப்பு செய்வதாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறினார்கள். எனினும் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தீர்மானத்தை வாசிக்குமாறு கூறினார். உடனே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் திடீரென்று தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் தி.மு.க. கவுன்சிலர்கள் இருக்கையை விட்டு எழுந்து, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அருகில் சென்று அ.தி.மு.க.வை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இருதரப்பு கவுன்சிலர்களும் மாறி, மாறி கோஷங்களை எழுப்பியதால் கூட்டரங்கு பரபரப்பாக காணப்பட்டது. மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் அனைத்து தீர்மானங்களும் பாஸ் என்று கூறினார்கள். கூட்டத்தில் 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டமானது தொடங்கிய 5 நிமிடங்களுக்குள் முடிவடைந்தது.

தனிப்பட்ட வளர்ச்சி

இதை தொடர்ந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறியதாவது:-

பொள்ளாச்சி நகராட்சியில் எந்தவித மக்கள் நலப்பணிகளும் நடைபெறவில்லை. சரியாக கூட்டம் நடைபெறுவதில்லை. அனைத்து தீர்மானங்களும் ஆல் பாஸ் என்று ஒரு நிமிடத்தில் கூறி கூட்டத்தை முடித்து விடுகின்றனர். அ.தி.மு.க. கவுன்சிலர்களின் வார்டுகள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது மேம்பாலம் கொண்டு வருகின்றனர். கொரோனா காலத்திற்கு பிறகு குறைவான பஸ்களே இயக்கப்படுகிறது. தனிப்பட்ட வளர்ச்சிக்காக பஸ் நிலையத்தை இடம் மாற்றம் செய்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story