அ.தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மங்கலம்பேட்டையில் அ.தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம்,
மங்கலம்பேட்டையில் விருத்தாசலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் கிளை செயலாளர்களுக்கு தீர்மான பதிவேடு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஒன்றிய அவைத் தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார், மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் வேல்முருகன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழி தேவன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு உள்கட்சி தேர்வு செய்யப்பட்ட கிளை செயலாளர்களுக்கு தீர்மான பதிவேடுகள் வழங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், பேரூர் துணை செயலாளர் பாலமுருகன், ஒன்றிய துணை செயலாளர்கள் தினேஷ் குமார், வீரம்மாள் பழனிசாமி, ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன், இணைச்செயலாளர் கீர்த்திகா பிரபாகரன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெமினிரவி, மணிகண்டன், எம்.புதூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் தேவபிரசாத், விஜயமாநகரம் மணிமாறன், குபேர தேவதாஸ், அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மங்கலம்பேட்டை பேரூர் கழக செயலாளர் ஜமால்முகமது நன்றி கூறினார்.