மோட்டார் சைக்கிள் மோதி அ.தி.மு.க. பிரமுகர் சாவு
மோட்டார் சைக்கிள் மோதி அ.தி.மு.க. பிரமுகர் இறந்தார்.
இட்டமொழி:
முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள காடன்குளம் பஞ்சாயத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர் ஒரு வேனில் மதுரை மாநாட்டுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாத்தூர் சுங்கச்சாவடி பகுதியில் வேனை ஓரமாக நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்காக இறங்கி உள்ளனர். அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேனில் இருந்து கீழே இறங்கிய காடன்குளம் திருமலாபுரத்தை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அ.தி.மு.க. பிரதிநிதி ஆறுமுகம் (வயது 65) என்பவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுமுகத்துக்கு மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.