எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சிறப்பாக செயல்படும் - முன்னாள் அமைச்சர் காமராஜ்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சிறப்பாக செயல்படும் என செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சிறப்பாக செயல்படும் என செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. கூறினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
நகர செயலாளர் ராஜசேகரன், துணை செயலாளர் கொய்யா மீராமைதீன், பொருளாளர் சுவாமிநாதன், முன்னாள் நகர செயலாளர் பசீர் அகமது, முன்னாள் நகர துணை செயலாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.-வில் இணைந்த 120 பேருக்கு காமராஜ் எம்.எல்.ஏ. சால்வை அணித்து வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'அ.தி.மு.க. என்றைக்குமே மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது. பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் அ.தி.மு.க. ஆட்சி காலம் பொற்காலமாக திகழ்ந்தது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில்...
இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமை அமைந்து, அ.தி.மு.க. சிறப்பாக செயல்படும்' என்றார்.
கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் முகமது அஸ்ரப், முன்னாள் நகர சபை தலைவர் ஜெயராஜ், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் காளிதாஸ், நகரசபை உறுப்பினர்கள் சொற்கோ, முருகேசன், சாந்தி கோபால், அவைத்தலைவர் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.