அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் வெளிநடப்பு


அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருப்பூர்

அவினாசி

வார்டில் எந்த வேலையும் நடக்கவில்லை என்று கூறி அவினாசி பேரூராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கூட்டம்

அவினாசி பேரூராட்சி கூட்டம் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற பொருள்படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

சசிகலா (7 -வது வார்டு):

அவினாசி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கும் கடந்த ஆண்டு வரை இரண்டாம் குடிநீர்திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் ஆற்றிலிருந்து குடிநீர் வினிேயாகம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த குடிநீர் மிகவும் சுவையாகவும், சுத்தமாகவும் இருந்தது. தற்போது மூன்றாவது குடிநீர் திட்டத்தின் கீழ் சிறுமுகை பகுதியில் இருந்து அன்னூர், அவினாசி, மோப்பிரிபாளையம் பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த குடிநீர் சுவையில்லாமலும் ஆழ்துளை கிணற்று நீர் போலவும் மிகவும் சப்பையாக உள்ளது.மேலும் குடிநீர் கரை படிந்தது போல் செம்மன் நிறமாக மாறி உள்ளதாக பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர். எனவே அதற்கான காரணம் அறிந்து குடிநீரை நல்ல முறையில் பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திருமுருகநாதன் (11- வது வார்டு)்:

ஈ.வெ.ரா.வீதியில் வடிகால் வசதி கேட்டு 6 மாதம் ஆகியும் பணி நடைபெற எந்த நடவடிக்கையுமில்லை.

வெளிநடப்பு

ஸ்ரீதேவி (18- வது வார்டு):

ஒவ்வொரு முறையும் மன்ற கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றுவதுடன் சரி எந்த வேலையும் நடைபெறுவதில்லை.

எங்கள் வார்டு பகுதிக்கு வந்தமுன்மாதிரி ரேஷன்கடைக்கு தீர்மானம் நிறைவேற்ற தாமதப்படுத்தியதால் அது கிடைக்கவில்லை. எந்த வேலை கேட்டாலும் அடுத்த முறை என்று தள்ளிப்போடுகிறீர்கள். எனது வார்டில் இது நாள்வரையிலும் எம்.எல்.ஏ. நிதியிலிருந்து ஒரே பணி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டு எனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது.

இதேபோல் சித்ரா (14-வது வார்டு), பத்மாவதி (9-வது வார்டு), சாந்தி (12-வது வார்டு), எஸ்.தேவி (10-வது வார்டு ), கவிதா (2-வது வார்டு) ஆகியோரும் எங்கள் வார்டுபகுதியில் எந்த வேலையும் நடைபெறவில்லை எதை சொன்னாலும் பிறகு பார்க்கலாம் பிறகு பார்க்கலாம் என்று தள்ளி போடுகிறார்கள். எனவே மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி அ.தி.மு.கவை சேர்ந்த 6 பெண்உறுப்பினர்களும் வெளிநடப்புசெய்தனர்.

பர்கதுல்லா (15-வதுவார்டு):

துணைத்தலைவர் மோகனிடம்எதுவும் பேசுவதில்லை உங்கள் கட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக சொன்னவுடன் உங்களது வார்டு பிரச்சனைகளை கவனிக்க நான் ஏற்பாடு செய்வதாக சொல்லாமல் எதுவும் பேசாமல் இருக்கிறீர்களே என்றார்..

தலைவர் தனலட்சுமி:

அனைத்து வார்டுகளுக்கும் பொது நிதியிலிருந்து தல ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுள்ளது குமரன் வீதியில் கான்கிரிட் சாலை அமைக்க ரூ.30 லட்சம் தேவைப்படும். எனவே கான்கிரீட் சாலை திட்டம் வரும்போது அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.அனைத்து வார்டுகளுக்கும் எந்த பாகுபாடும் இன்றி பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



Related Tags :
Next Story