தொடர் குற்ற செயலில் கைதானவர் குண்டர் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு


தொடர் குற்ற செயலில் கைதானவர் குண்டர் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
x

தொடர் குற்ற செயலில் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர்

திருத்தணி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபாப்பா (வயது 55). இவர் கடந்த மாதம் 31-ந் தேதி ராமகிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்ததில் இருந்து கிராமத்திற்கு செல்லும் போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சின்னபாப்பாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து சின்னபாப்பா கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த 5 மணி நேரத்திற்குள் சின்னபாப்பாவிடம் நகை பறித்த அரக்கோணம் தாலுக்கா, பாராஞ்சி ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட ரஜேஷ் மீது ராணிப்பேட்டை, திருத்தணி, பாணாவரம், திருவண்ணாமலை பிரம்மதேசம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ரஜேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ்க்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ராஜேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை புழல் சிறை அதிகாரிகளிடம் ராஜேஷ் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவதற்கான உத்தரவை வழங்கினார்.


Next Story